தலையெடுக்கும் ரத்த பற்றாக்குறை…..நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு கூடுதல் சவால்….

 

தலையெடுக்கும் ரத்த பற்றாக்குறை…..நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு கூடுதல் சவால்….

கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் லாக்டவுன் மத்தியில் தற்போது தற்போது ரத்த பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது டாக்டர்களுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடைமுறையில் உள்ள லாக்டவுனால் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ரத்த சோகை, டயாசிலிஸ், காச நோய் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தேவையான அளவை காட்டிலும் குறைவான அளவே ரத்தம் கிடைக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்ளை அளிப்பது மருத்துவர்களுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கம்

இது தொடர்பாக  இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் கூறுகையில், லாக்டவுன் முன் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கி தினந்தோறும் சராசரியாக 100 யூனிட் ரத்தம் பெற்று வந்தது. ஆனால் தற்போது 42 யூனிட் அளவுக்கே எங்களால் ரத்தம் பெறமுடிகிறது. இது ரத்த சோகை, டயாசிலிஸ், காச நோய் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அளவை காட்டிலும் குறைவாகும் என தெரிவித்தனர்.

ரத்த தானம்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கி இயக்குனர் வான்ஸ்ரீ சிங் கூறுகையில், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரத்த கலெக்ஷன் இல்லை. லாக்டவுன் சமயத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 முதல் 50 யூனிட் அளவுக்குதான் ரத்தம் கிடைக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 யூனிட் ரத்தம்தான் கிடைத்தது. இது மிகவும் குறைவாகும். இதனால் ரத்த நன்கொடை வழங்குவதற்கு மக்களை ஊக்குவிக்க தொண்டு நிறுவனங்கள், மத குழுக்கள் மற்றும் நிறுவன துறையின் உதவியை கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.