தலைமை செயலகத்தை முற்றுகையிட லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணி.. முதல்வர் அவசர ஆலோசனை!

 

தலைமை செயலகத்தை முற்றுகையிட லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணி.. முதல்வர் அவசர ஆலோசனை!

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பேரணி நடத்தப்படும் என்று இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்திருந்தனர். 

குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியும் அதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக் கிழமை முதல் சென்னை வண்ணார பேட்டையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால் போராட்டம் வலுவடைந்தது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பேரணி நடத்தப்படும் என்று இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்திருந்தனர். 

ttn

இந்த போராட்டத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் இன்று தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி நடைபெற்ற பேரணி நிறைவடைந்ததால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டும் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். இதனிடையே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.