தலைமை என்பது பொதுமக்களை தவறான திசையில் வழி நடத்துவது அல்ல! ராணுவ தளபதி வேதனை

 

தலைமை என்பது பொதுமக்களை தவறான திசையில் வழி நடத்துவது அல்ல! ராணுவ தளபதி வேதனை

தலைமை என்பது பொதுமக்களை தவறான திசையில் வழிநடத்துவது அல்ல என குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் நடந்த வன்முறைகள் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்துக்கு எதிரான நடைபெற்ற பல போராட்டங்களில் வன்முறை வெடித்தது. சில விஷமிகள் பொது சொத்துக்களுக்கு சேதம் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். பல்கலைக் கழக மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

இந்த சூழ்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தளபதி பிபின் ராவத் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை நிகழ்வது தொடர்பாக கருத்து தெரிவித்தார். அவர் இது குறித்து கூறுகையில், தலைமை என்பது முன்னணியில் உள்ளது. நீங்கள் முன்னேறும் போது எல்லோரும் உங்களை பின் தொடர்கிறார்கள். தலைவர்கள்தான் மக்களை சரியான திசையில் கொண்டு செல்வார்கள் தலைவர்கள் மக்களை தவறான பாதையில் வழி நடத்தமாட்டார்கள். 

வன்முறை

அதிக அளவில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். நகரங்களில் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை நிகழ்த்த அவர்களை வழிநடத்துவது நல்ல தலைமை அல்ல என தெரிவித்தார்.