தலைமையின் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் : மு.க அழகிரி பேட்டி

 

தலைமையின் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் : மு.க அழகிரி பேட்டி

சில நாட்களுக்கு முன்பு, தனது போயஸ்கார்டன் வீட்டின் வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, தனது போயஸ்கார்டன் வீட்டின் வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில், தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லை. தலைமையில் வெற்றிடம் நிலவுகிறது என்று கூறினார். இதற்கு, விக்கிரவாண்டியில் நடந்த அதிமுக கூட்டத்தில் தமிழக தலைமையில் வெற்றிடம் இல்லை என்று ரஜினி கூறியதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கும் விதமாகப் பேசினார். 

Rajini

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி,ரஜினி கூறியது போலத் தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான். அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று கூறியுள்ளார்.

Azhagiri

முன்னதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் தமிழக தலைமையில் நிலவும் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பி விட்டதாக ரஜினிக்குப் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.