தலைப்பை மாத்து, இல்லேன்னா படத்தையே மறந்துரு – சென்சார் போர்ட் கறார்!

 

தலைப்பை மாத்து, இல்லேன்னா படத்தையே மறந்துரு – சென்சார் போர்ட் கறார்!

மென்ட்டல் ஹே க்யா படத்தை இந்திப்படவுலகின் வலிமையான தயாரிப்பாளரான ஏக்தா கபூர் தயாரித்திருந்தாலும், அவரால்கூட சென்சார் போர்ட் அதிகாரிகளை சமாளிக்க முடியவில்லை. தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ஹீரோயின் கங்கனா ரனாவத் என பாஜகவுக்கு சாதகமானவர்களின் படமாக இருந்தாலும்கூட, பட தலைப்பை மாற்றுவதில் சென்சார் போர்ட் உறுதியாக இருக்கிறது

“மென்ட்டல் ஹே க்யா” ரங்கனா ரனாவத் நடித்து ரிலீஸுக்கு காத்திருக்கும் இந்திப்படம். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படம் மருத்துவர்களை சிறுமைப்படுத்துவதாகக்கூறி படத்துக்கு மருத்துவர்கள் தடைகோரியதுபோல, இந்தப்படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கொச்சைப்படுத்துவதுதாக, இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் கடுமையாக ஆட்சேபித்திருக்கிறது. இந்த ஆட்சேபனையைக் கருத்தில்கொண்ட சென்சார் போர்ட், படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

Mental Hai Kya crew

மென்ட்டல் ஹே க்யா படத்தை இந்திப்படவுலகின் வலிமையான தயாரிப்பாளரான ஏக்தா கபூர் தயாரித்திருந்தாலும், அவரால்கூட சென்சார் போர்ட் அதிகாரிகளை சமாளிக்க முடியவில்லை. தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ஹீரோயின் கங்கனா ரனாவத் என பாஜகவுக்கு சாதகமானவர்களின் படமாக இருந்தாலும்கூட, பட தலைப்பை மாற்றுவதில் சென்சார் போர்ட் உறுதியாக இருக்கிறது. பட தலைப்பை மாற்றுங்கள், இல்லையென்றால் படத்தை மறந்துவிட்டு அடுத்த பட வேலையை துவக்குங்கள் என்பதுதான் சென்சார் போர்டின் இறுதி நிலைப்பாடு.