தலைநிமிர செய்யும் தை பூச வழிபாடு!

 

தலைநிமிர செய்யும் தை பூச வழிபாடு!

தை மாத‌த்தில் நடைபெறும் மிகவும் பிரசித்த பெற்ற விழாக்களில் ஒன்றான தை பூச விழாவின் முக்கியத்துவத்தினை பற்றி பார்போம்.

தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசம் முக்கியமானது. 
 

muruga

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த முருகப்பெருமான் இருக்கும் இடங்களில் எல்லாம் தைப்பூசத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திருக்கோயிலில் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

சிவபெருமானின் மனைவியான அன்னனை பார்வதி தேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன் அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

muruga

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

தேவாரம், திருவாசகம்,கந்த சஷ்டி கவசம்  போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும். அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும்.மாலையில் அருகில் உள்ள சிவன் அல்லது முருகன் கோயிலுக்கு சென்று வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும்  துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும் அதுமட்டுமில்லாது கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும்.

muruga

இந்த விரதத்தினை கடைபிடிப்பதன் மூலம் எந்நாளும் இளமையுடன் இருக்கலாம் . தைப்பூசம் அன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல் ஏடு தொடங்குதல்,சோறு ஊட்டுதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் பக்தர்கள்  பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

vallalaar

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். இதை குறிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத்தன்று அதிகாலை ஜோதிதரிசனம் நடைபெறுகிறது. அன்று மேட்டுக்குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி இவ்விழாவை கொண்டாடுகின்றனர். 

தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும் தைப்பூச ஒளி வழிபாட்டு விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.

thaipoosam

முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட இராமலிங்க அடிகளார் தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம் ஆகும். ஆகையால் அன்றைய நாள் வடலூரில் வள்ளலாருக்குரிய  நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

வடலூரில் தைப்பூசத்தன்று சிறப்புப் பூஜைகளும், அன்னதானமும் இன்றும்  சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த அற்புதமான ஒளிக் காட்சி காண மக்கள் அலை அலையாக வடலூருக்கு வருகை தருகின்றனர்.