தலைக்கேறிய போதை; பீர் பாட்டிலால் தயாரிப்பாளரை அடித்த பிரபல நடிகை!

 

தலைக்கேறிய போதை; பீர் பாட்டிலால் தயாரிப்பாளரை அடித்த பிரபல நடிகை!

தமிழில்  அருண் விஜயின் ‘பாக்சர்’ படத்திலும், சிரிச்சா போச்சு நடிகர் ராமர் ஹீரோவாக நடிக்கும் ‘போடா முண்டம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி  சஞ்சனா கல்ராணி. கன்னட கன்னட சினிமாவில்  நடித்து வரும் இவர் தமிழில்  அருண் விஜயின் ‘பாக்சர்’ படத்திலும், சிரிச்சா போச்சு நடிகர் ராமர் ஹீரோவாக நடிக்கும் ‘போடா முண்டம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ttn

இந்நிலையில் சமீபத்தில் இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து  கொண்ட சஞ்சனா கல்ராணி அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு கன்னட தயாரிப்பாளர் வந்தனா ஜெயினிடம் போதையில் தகராறு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே,  சஞ்சனா தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் வந்தனாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ttn

இதையடுத்து  வந்தனா ஜெயின், சஞ்சனா கல்ராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சஞ்சனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால்  இதை மறுத்துள்ள சஞ்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் ஆனால்  பீர் பாட்டிலால் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.