தலைக்கு மேல் கடன்! தப்பிக்க நிறுவனங்களை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தும் அனில் அம்பானி

 

தலைக்கு மேல் கடன்! தப்பிக்க நிறுவனங்களை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தும் அனில் அம்பானி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜி.சி.எக்ஸ். நிறுவனமும் திவால் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்துமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவின் மெகா கோடீஸ்வராக திகழ்ந்த அனில் அம்பானி தற்போது கடன்தாரர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார். கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனம் பல மாதங்களுக்கு முன் திவால் நடவடிக்கையில் விழுந்தது. 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

இந்நிலையில்  ஆர்காம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜி.சி.எக்ஸ். நிறுவனமும் தன்னை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜி.சி.எக்ஸ். நிறுவனம் கடலுக்கு அடியில் கேபிள் சேவை அளிக்கும் நிறுவனம். சர்வதேச அளவில் இத்துறையில் மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஜி.சி.எக்ஸ். என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.சி.எக்ஸ். நிறுவனம்

இந்நிறுவனம் வெளியிட்ட 35 கோடி டாலர் நிறுவன பத்திர முதலீடுகளில் 7 சதவீதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதிர்வு அடைந்தது. போதிய நிதி இல்லாததால் முதலீட்டாளர்களுக்கு ஜி.சி.எக்ஸ். நிறுவனத்தால் உறுதி அளித்தப்படி பணத்தை கொடுக்க முடியவில்லை. முதலீட்டாளர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கியதால் ஜி.சி.எக்ஸ். நிறுவனம் தன்னை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அனில் அம்பானி தனது கடன் சுமையை குறைக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை வழிகளிலும் முயற்சி வருகிறார். அதேசமயம், நெருக்கடி முற்றி வருவதால் தப்பிக்க வேறுவழியில்லாமல் நிறுவனங்களை திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகிறார்.