தலயை 5வது இடத்துக்கு தள்ளிய தளபதி! எதில் தெரியுமா?

 

தலயை 5வது இடத்துக்கு தள்ளிய தளபதி! எதில் தெரியுமா?

கடந்த வருடத்தில் விக்கிப்பீடியா பக்கத்தில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகர்களில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். 

சென்னை: கடந்த வருடத்தில் விக்கிப்பீடியா பக்கத்தில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகர்களில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் ரஜினி-கமல் ரசிகர்களிடேயே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து சூர்யா- விக்ரம் மற்றும் விஜய்- அஜித் என இது தொடர ஆரம்பித்தது. இதில் பெரிதாக அஜித்- விஜய் ரசிகர்களிடேயே உள்ள மோதல் தான் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு மூல காரணமாக அமைந்ததே அந்த ஹீரோக்கள் தான். ஏனென்றால் ஒரு காலத்தில் விஜய்-அஜித் இடையே கடுமையாக போட்டி நிலவப்பட்டது. இருவரும் தாங்கள் நடிக்கும் படத்தில் ஒருவருக்காரு ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு போட்டி போட்டு அசிங்கப்படுத்திக் கொண்டனர். உதாரணமாக அஜித்  நடித்த அட்டகாசம்  படத்தில் இடம்பெற்ற உனக்கென்ன உனக்கென்ன பாடலில் ‘இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன. ஹிட்லர் ஆக வாழ்வது கொடிது.. புத்தனாக வாழ்வது கடிது..ஹிட்லர் புத்தர் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன?’ என்று இடம்பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் நடித்த சச்சின் படத்தில் இடம்பெற்ற வா என் தலைவா பாடலில் ‘ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம் புத்தன் வாழ்க்கையும் வேண்டாம் உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும்’ என்று இடம் பெற்றுள்ளது.  

பின்னர் அஜித்-விஜய் அனைத்தையும் மறந்து சமரசம் செய்து கொண்டு நிலையிலும், அவர்களது ரசிகர்கள் தொடர்ந்து அடிச்சிகொண்டே தான் இருக்கின்றனர். 

vijay

இந்நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக விஜய் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு விக்கிப்பீடியா பக்கத்தில் விஜய்யின் பக்கத்தை 2.42 மில்லியன் பேர் பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதையடுத்து இதில் 1.66 மில்லியன் பார்வைகளைப் பெற்று 5வது இடத்தை நடிகர் அஜித் படித்துள்ளார். 

நடிகர் விஜயை தொடர்ந்து ரஜினிகாந்த் (2.3 மில்லியன்), 3வது இடத்தில் விஜய் சேதுபதி (2.15 மில்லியன்), 4வது இடத்தில் கமல் ஹாசன் (1.7 மில்லியன்), 5வது இடத்தில் அஜித் (1.6 மில்லியன்), 6வது இடத்தில் தனுஷ் (1.5 மில்லியன்), 7வது  இடத்தில் சூர்யா (1.2 மில்லியன்) ஆகியோர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: வைரலாகும் சிம்பு வீட்டு திருமண அழைப்பிதழ் : சோகத்தில் சிம்பு ரசிகர்கள்!?