தற்போதைய சூழ்நிலையில் ராகுல் மட்டுமே காங்கிரஸை நன்றாக வழிநடத்த முடியும்- ராஜஸ்தான் முதல்வர்!

தற்போதைய சூழ்நிலையில் ராகுல் மட்டுமே காங்கிரஸை நன்றாக வழிநடத்த முடியும்- ராஜஸ்தான் முதல்வர்!

தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தி மட்டுமே காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தெரிவித்துள்ளார். 

தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தி மட்டுமே காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தெரிவித்துள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியினர் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ், பல்வேறு இடங்களில் படு தோல்வியடைந்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் முடிவை மாற்றும்படி கோரியும் ராகுல் அவரது முடிவில் உறுதியாக இருந்தார். 

இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், கர்நாடகா துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஆகியோர் ராகுல் காந்தியுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட், ‘ராகுல் காந்தியிடம் நாங்கள் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என கேட்டிருந்தோம். ராகுல் காந்தி, நாங்கள் சொன்ன விஷயங்களை கவனமாகக் கேட்டார். அவர்  நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். தற்போதைய சூழலில் ராகுலால் மட்டுமே காங்கிரஸை சிறப்பாக வழிநடத்த முடியும்’ என்று தெரிவித்தார்.