தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

 

தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சாலை, ரயில் மற்றும் விமானம் என அனைத்து விதமான போக்குவரத்துகளும் முடக்கபபட்டுள்ளன. விமானங்கள் அனைத்தும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக விமான நிலையங்களில் ஓய்வு எடுத்துவருகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் உள்நாட்டில் குறிப்பிட்ட வழிதடங்களில் விமானங்களை இயக்கப்போவதாகவும், ஜூன் மாதம் முதல் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையை தொடங்க இருப்பதாகவும் அறிவித்தது. 

ஏர் இந்தியா

ஆனால் தற்போது அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகே விமான சேவை தொடங்கு என்றும் ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.