தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம்; சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை!

 

தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம்; சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை!

தென்சீனக் கடல் பகுதி எப்போதும் பதற்றத்துடனையே காணப்படுவது வழக்கம். சர்வதேசக் கடல் போக்குவரத்தின் முக்கியப் பாதையாகத் திகழும் தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது

மனிலா: தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசு நிர்வாகத்துக்கு உட்பட்ட தீவின் அருகே சீனக் கப்பல்கள் நுழைந்ததாக வெளியான தகவலையடுத்து, எனது ராணுவத் துருப்புகளை கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்துவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்சீனக் கடல் பகுதி எப்போதும் பதற்றத்துடனையே காணப்படுவது வழக்கம். சர்வதேசக் கடல் போக்குவரத்தின் முக்கியப் பாதையாகத் திகழும் தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், அந்த கடல் பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று அமெரிக்கா கூறி வருகிறது. அத்துடன் பல்வேறு சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.

south china sea island

இங்குள்ள பிரச்னைக்குரிய திட்டுத் தீவை, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடையது என சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில், திட்டு தீவின் சுற்றுப்பகுதிகளில் சுமார் 275-க்கும் மேற்பட்ட சீன கப்பல்கள் தென்படுவதாக அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை சில தினங்களுக்கு முன்னர் கூறியது.

rodrigo duterte

இந்நிலையில், ராணுவத் துருப்புகளை கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்துவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாம் நண்பர்களாக இருப்போம். ஆனால், திட்டு தீவு மற்றும் இதர பகுதிகளை தொடாதீர்கள். அப்படி செய்தீர்கள் எனில் அது வேறு கதையாகி விடும். நான் எனது வீரர்களை தற்கொலைப் படை தாக்குதலுக்குத் தயாராகுமாறு கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

philippines troops

இது எச்சரிக்கை அல்ல, நண்பர்களுக்கான எனது அறிவுரையே என குறிப்பிட்டுள்ள அவர், நான் கெஞ்சவும் இல்லை, பிச்சையும் எடுக்கவில்லை. ஆனால், திட்டு தீவில் இருந்து வெளியேறி விடுங்கள். ஏனெனில், எனது ராணுவ வீரர்கள் அங்குள்ளனர் எனவும் பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திட்டு தீவை சுற்றி இருக்கும் கப்பல்கள் குறித்தும், அதன் எண்ணிக்கை குறித்தும் சரிபார்க்க சீனா முயற்சித்து வருகிறது என கூறிய பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான சீன தூதர், ஆயுதங்கள் அல்லாத மீன் பிடி கப்பல்களாக அவை இருக்கலாம் என பின்னர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

பாகிஸ்தான் F-16 ரக போர் விமானத்தை இந்தியா சுடவில்லை; அதிர்ச்சி தகவல்!