தற்காலிக அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு..

 

தற்காலிக அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு..

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்ட விதி 110ன் கீழ் மகப்பேறு விடுமுறை 9 மாத காலமாக உயர்த்தப்பட்டது.

தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகள் உள்ளிட்ட அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 6 மாத காலம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு, கடந்த 2016 ஆம் ஆண்டு சட்ட விதி 110ன் கீழ் மகப்பேறு விடுமுறை 9 மாத காலமாக உயர்த்தப்பட்டது. நிரந்தர அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. 

 மகப்பேறு விடுமுறை

இந்நிலையில், தற்காலிகமாக அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, தற்காலிகமாக பணியாற்றும் பெண்களுக்கும் 10 மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.