‘தர்ஷன் பத்தி உனக்கு என்ன தெரியும்’? மீரா குறித்து புறம் பேசும் சேரன்

 

‘தர்ஷன் பத்தி உனக்கு என்ன தெரியும்’? மீரா குறித்து புறம் பேசும் சேரன்

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்களைக்  கடந்துள்ளது. சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாத  இந்த சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்றைய போட்டியிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் வனிதா வெளியேறினார். 

இந்த நிலையில் நேற்று மீரா தர்ஷனிடம் தான் காதலிப்பதாகக் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த தர்ஷன் கமல் முன்பு அதை போட்டுடைத்தார். அதனால் மீராக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்துள்ளன. தற்போது ஹவுஸ் மேட்ஸ் மீரா குறித்து புறம் பேசும் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஷெரின் மற்றும் சேரன் கார்டன் பகுதியில் அமர்ந்துள்ளனர். 

அப்போது ஷெரின், ‘உனக்கு என்ன பிரச்னை மீரா, என்று கேட்க சேரன் அதற்கு ‘அவளுக்கு மூன்றாவது வாரம் போய்விடுவோம் என்ற பயம் வந்துடுச்சு, ஆனால் அவருக்கு இங்க இருக்கணும் தோணுது அதனால் தான் என்றார். உடனே ஷெரின், ‘அது எப்படி கல்யாணம் வரை வந்தது இந்த விஷயம்’ என்று கூறினார். 

அதைத் தொடர்ந்து சேரன், ‘அது எப்படி திடீரென லவ் பன்றன் மச்சான், வந்து எங்க அம்மா கிட்ட பேசு சொல்றது? முதலில் உனக்கு தர்ஷன் பத்தி என்ன தெரியும்? இது எப்படி உலகத்து’ல எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணும், எல்லா இடத்தலையும் பிரச்சனை தான் வரும்… என்று பேசியுள்ளார். 

மேலும் வனிதா எலிமினேட் செய்யப்பட்டு விட்டதால் ஹவுஸ் மேஸ்டஸ் மற்றும் பிக் பாஸ்யின் அடுத்த டார்கெட் மீராவை கூறி  வைக்கின்றனர்.