தர்ம பிரபு டீஸர்: அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா! தில்லாக செம கலாய் கலாய்க்கும் யோகி பாபு

 

தர்ம பிரபு டீஸர்: அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா! தில்லாக செம கலாய் கலாய்க்கும் யோகி பாபு

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகிவரும் தர்மபிரபு படத்தின் டீஸர் வெளியானது.

சென்னை: நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகிவரும் தர்மபிரபு படத்தின் டீஸர் வெளியானது.

நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்துவரும் திரைப்படம் தர்மபிரபு. முத்துகுமரன் இயக்கி வரும் இப்படத்தில் ரமேஷ் திலக், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி வரும் இதில்,யோகிபாபு எமனாக நடித்து வருகிறார்.

எமலோகத்தில் எமன் பதவி தேர்தல் நடக்கிறது. அந்த பதவிக்கு வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும், சித்ரகுப்தனாக இருக்கும் கருணாகரனும் போட்டியிடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார் என்பது படத்தின் கதையாகும். 

dharmaprabhu

இந்நிலையில் இப்படத்தின் டீஸர்ரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். அதில் பூலோகத்தில் தான் தகுதி இல்லாதவர்களுக்குப் பதவி கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது எமலோகத்திலுமா? இங்கு எல்லோரும் தகுதியுடன் தான் பதவியில் இருக்கிறார்களா?

அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா, அக்கவுன்டில் பணம் போடுவதாகச் சொல்லிவிட்டு ஆடைகளாகப் போட்டுக் கொண்டிருக்கிறாரா?அவர் நமது கணக்கில் இருக்கிறாரா?’ என்று அரசியல் கட்சிகளை செம கலாய் கலாய்க்கும் யோகி பாபுவின் நகைச்சுவை பேச்சைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

இதையும் படிங்க: விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை: நடிகை ரைசா ஓபன் டாக்!