தர்பார்… ஹீரோ…எம்.ஜி.ஆர் மகன்… தொடரும் கதை திருட்டு… திருந்துவார்களா திரையுலக பிரம்மாக்கள்..!?

 

தர்பார்… ஹீரோ…எம்.ஜி.ஆர் மகன்… தொடரும் கதை திருட்டு… திருந்துவார்களா திரையுலக பிரம்மாக்கள்..!?

கோடம்பாக்கத்தில் பெரிய இயக்குநர்களே நல்ல கதை கிடைக்காமல் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்க்ள். ஆனால் அதே சமயம் யாரிடமும் கதையை வாங்கி படம் பண்ணுவதில்  அவர்களுக்கு ஈகோ மூட்டிக்கொண்டு நிற்கிறது. இது எங்கு போய் முடிகிறதென்றால் அரசல் புரசலாக கேட்கப்படும் செய்திகளையும் விவாதங்களில் பேசப்படும் காட்சிகளையும் தங்கள் படங்களில் இயக்குநர்கள் வைத்து விடுகிறார்கள்!

கோடம்பாக்கத்தில் பெரிய இயக்குநர்களே நல்ல கதை கிடைக்காமல் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்க்ள். ஆனால் அதே சமயம் யாரிடமும் கதையை வாங்கி படம் பண்ணுவதில்  அவர்களுக்கு ஈகோ மூட்டிக்கொண்டு நிற்கிறது. இது எங்கு போய் முடிகிறதென்றால் அரசல் புரசலாக கேட்கப்படும் செய்திகளையும் விவாதங்களில் பேசப்படும் காட்சிகளையும் தங்கள் படங்களில் இயக்குநர்கள் வைத்து விடுகிறார்கள்!

sarkar

இது படம் வெளியாகும்போது முறைப்படி பதிவுசெய்திருக்கும் நபர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் கோர்ட்டுக்கு ஓடுகிறார். தயாரிப்பாளரோ பைனாஸியரிடம் ஓடுகிறார். கடைசியில் படம் எதிர்பார்த்த வசூலை அடையாமல் இழப்பை சந்திக்கிறது. இதற்குக்காரணம் இயக்குநர்கள்தான் தங்கள் கற்பனையில் உதிக்கும் விஷயங்களைதான் படமாக்க வேண்டும்.
சர்க்கார் கதை திருட்டு ஒரு பாடமாக இருக்கிறது. உரியவரான வருண் ராஜேந்திரன் காப்பிரைட் குறித்த எல்லா விஷயங்களையும் தெளிவாக தெரிந்து வைத்திருந்ததால் கோர்ட்டில் கடைசி வரைக்கும் நின்று வாதாடி வெற்றி பெற்றார். இதற்கு பிறகும் கதை திருட்டு குறையவில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம். 
சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் எழுதி  வார இதழ் ஒன்றில் வெளிவந்திருந்த ஒரு கதையை  ‘எம்.ஜி..ஆர். மகன்  என்ற பெயரில் இயக்குநர் பொன்ராம் எடுத்து வருவதாக குற்றம் சாட்டு கிளம்பி,பெரிய அளவில் பஞ்சாயத்து பேச தயாராகி வருகிறார்கள் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களும்.சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் எழுதி ஒரு வார இதழில் வெளியான கதையில், எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருவர் கண்ணியத்துடன் எம்.ஜி.ஆர். வழியில் வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் வளர்த்து வரும் வாலிபர் ஊதாரியாக சுற்றுகிறார். அவரை எப்படி திருத்தி இந்த சமூகத்தில் அந்தஸ்துள்ள நபராக மாற்றுகிறார் என்று எழுதியிருந்தார். இதில் சம்பவத்தை விட்டுவிட்டு கதாபாத்திரங்களை மட்டும் தங்கள் படத்தில் வைத்துக்கொண்டு முழுபடத்தையும் எடுத்து முடித்திருப்பதாக இயக்குநர் பொன்ராம் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் அந்த பத்திரிகையாளர். 

mgr magan

ஒரு கதாசிரியர் எழுதியிருக்கும்  கதாபாத்திரத்தை எடுத்தாலும் திருட்டுதான் என்பதை படைப்பாளிகள் மனசாட்சியோடு ஒத்துக்கொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க முருகதாஸ் தற்போது எடுத்து வரும் ரஜினியின் தர்பார் படமும் சுடப்பட்ட கதைதான் என்ற தகவலை சொன்னார் அந்த குழுவில் பணியாற்றும் ஒருவர். இது தெரிந்து உடனே ரஜினி சம்மந்தப்பட்ட நபரை அவரே அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தாராம்! இது வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். 
இப்போது சிவகார்த்திகேயன் படத்திற்கும் இதே பிரச்சனை வந்து பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. ஹீரோ படத்தின் இயக்குநர் மித்ரன் தன் கதையை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் பிரச்சனையை கிள்ப்பியிருக்கிறார்.

hero

இதனால் சிவகார்த்திகேயன் அதிர்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தலைப்புக்கே பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இப்போது கதைக்குமா என்று அலுத்துப்போய் சம்மந்தபட்டவர்களை அழைத்து பேசுங்கள் என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார். இப்போது ஹீரோ கதையின் ஸ்கிரிப்டையும் முருகதாஸ் உதவி இயக்குநர் எழுதியிருக்கும் ஸ்கிரிப்டையும் ஒரே நேரத்தில் படிக்கும் வேலை நடந்து வருகிறது. 
இதில் வேடிக்கை என்னவென்றால் ஹீரோ படத்தின் கதையே  காப்பிரைட் சம்பந்தப்பட்டதுதானாம்!