தர்பார்: மாசான அப்டேட்டை வெளியிட்ட சந்தோஷ் சிவன் 

 

தர்பார்: மாசான அப்டேட்டை வெளியிட்ட சந்தோஷ் சிவன் 

சென்னை: ரஜினி- நயன்தாரா இணைந்து நடித்து வரும் தர்பார் படத்தின் அப்டேட்டை சந்தோஷ் சிவன் வெளியிட்டுள்ளார். 

முதல் முறையாக ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தர்பார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். ஏப்ரல் 10ம் தேதியை மும்பையில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த்- நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் ஜெய்ப்பூர் சென்று விறுவிறுப்பாக மீதமுள்ள படத்தைப் படமாகி வருகின்றன. 

இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த்-நயன்தாராவின் ஒரு பாடலின் பெரிய காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அது இந்த படத்தின் பெரிய ஹைலைட். அந்த பாடலுக்கு மிக சிறப்பாக நடன பயிற்சியாளர் பிருந்தா அமைத்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.