தர்பார் போஸ்டர் ஹாலிவுட் டிசைன் அல்ல, மூன்று முகம் டிசைன்: மனம்திறந்த டிசைனர்

தர்பார் போஸ்டர் ஹாலிவுட் டிசைன் அல்ல, மூன்று முகம் டிசைன்: மனம்திறந்த டிசைனர்

கடந்த 9-ஆம் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டர் வெளியான சில நேரங்களிலேயே இது ஹாலிவுட் படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா இதில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். பேட்ட படத்துக்கு பிறகு அனிருத் இரண்டாவது முறையாக இதில் ரஜினிக்கு இசையமைக்கவுள்ளார். அதேபோல் ‘தளபதி’ படத்துக்கு பிறகு ரஜினிக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

darbar

கடந்த 9-ஆம் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டர் வெளியான சில நேரங்களிலேயே இது ஹாலிவுட் படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

darbar

அர்னால்டு நடித்த killing gunther என்ற படத்தின் போஸ்டரை ஷேர் செய்தனர். இதற்கு தர்பார் போஸ்டர் டிசைனர் வின்சிராஜ் விளக்கமளித்துள்ளார்.

ரஜினியின் மூன்று முகம் படத்தின் டிசைன் மற்றும் அபாய சின்னத்தை மனதில் வைத்துதான் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டது என தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர்தான் ‘கபாலி’, ‘காலா’ படங்களின் போஸ்டர் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: பொன்னியின் செல்வனில் சத்யராஜ்: பாகுபலியால் கிடைத்த மாஸ் ரோல் இது தான்!?