தர்பார் பட வெளியீட்டின்போது ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதி மறுப்பு

 

தர்பார் பட வெளியீட்டின்போது ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதி மறுப்பு

சேலத்தில் தர்பார் பட வெளியீட்டின்போது ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. 

சேலத்தில் தர்பார் பட வெளியீட்டின்போது ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் . இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

darbar

தர்பார் திரைப்படத்தின் பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 200 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள தர்பார் படம் உலகம் முழுவதும் 7000 திரையரங்குகளிலும், இந்தியாவில் 4000 திரையரங்குகளிலும் வெளியாகிறது. படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் ரூ. 8 கோடி ரூபாயை படக்குழுவினர் செலவு செய்துள்ளனர்.  படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

darbar

இதனிடையே தர்பார் திரைப்படம் ரிலீஸின் போது ஹெலிகாப்டரிலிருந்து மலர்தூவ அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் ரஜினி ரசிகரான  கனகராஜ் கோரிக்கை மனு அளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் திரையரங்கம் அமைந்துள்ள பகுதி நகரின் முக்கிய இடம் என்பதால் கனகராஜ் என்பவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதி மறுக்கப்பட்டது.