தர்பார் படத்தில் நடித்த திருநங்கைக்கு இயக்குநர் சீனுராமசாமி வாழ்த்து!

 

தர்பார் படத்தில் நடித்த திருநங்கைக்கு இயக்குநர் சீனுராமசாமி வாழ்த்து!

தர்பார் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த திருநங்கைக்கு இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை: தர்பார் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த திருநங்கைக்கு இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார்.  லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்து வரும் இந்த படத்தில் 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். 

இதில் ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு 2020-ம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவுள்ளது. 

இந்நிலையில், இதில் ரஜினிகாந்த்துடன் இணைந்து திருநங்கை ஜீவா பணியாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘தர்ம துரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி, இன்று சூப்பர் ஸ்டார் தியானி ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கையர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.