தர்பார் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்!

 

தர்பார் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார். 

darbar

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஏப்ரல் 9) ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. தளபதி படத்துக்கு பிறகு சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

yogi babu

இந்நிலையில் இப்படத்தில்  பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். மும்பையில் நடக்கும் முதற்கட்ட படப்பிடிப்பில் யோகிபாபு கலந்துகொள்ளவிருக்கிறார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு(2020ல்) பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!