தர்பார் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!

 

தர்பார் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!

ரஜினியின் தர்பார் படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை:  ரஜினியின் தர்பார் படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவருகிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  சமீபத்தில் நடந்து முடிந்தது. விரைவில் 3ம் கட்ட படப்பிடிப்பு பற்றி அறிவிப்பு வரும் என்று எதிர்பாக்கப்டுகிறது. 

இதற்கிடையில் இதில் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இணைந்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. அவர் இதில் ரஜினியின் அறிமுக காட்சியில்  நடிப்பதாகவும், ரஜினியுடன் பயங்கரமான சண்டைக்காட்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

yuva

மேலும் யுவராஜின் தந்தை யோக் ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ஒரு டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடிப்பில் இறங்கிய இவர் பஞ்சாப் படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார்