தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் கமல்ஹாசன்! 

 

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் கமல்ஹாசன்! 

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் தர்பார்.  இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார் .

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த்  காவலராக நடித்துள்ள  இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

darbar

ஏற்கனவே தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.  தர்பார் படத்தின்  மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4  மொழிகளிலும் வெளியிடப்பட்டது. 

 

 

இந்நிலையில்  தர்பார் படத்தின் தெலுங்கு மோஷன் போஸ்டரை தமிழில் கமல்ஹாசனும் , மலையாளத்தில் நடிகர் மோகன் லாலும், ஹிந்தியில் நடிகர் சல்மான் கானும் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் வெளியிட்டனர்.