தர்பார் டப்பிங்கை முடித்தார் தலைவர்… ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்!

 

தர்பார் டப்பிங்கை முடித்தார் தலைவர்… ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்!

அந்த வரிசையில்  மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த்  காவலராக நடித்துள்ள  இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

darbar

ஏற்கனவே தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அந்த வரிசையில்  மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

darbar

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 14 ஆம் தேதி படத்தின் டப்பிங் பணிகளில் இணைந்தார். மைலாப்பூரில் உள்ள நாக் ஸ்டுடியோவில் ரஜினி  டப்பிங் கொடுத்து வந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக படத்தின் இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தர்பார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் தலைவர். என் வாழ்க்கையில் சிறந்த டப்பிங் பணிகள் தர்பார் தான்’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக  தர்பார் திரைப்படம் வரும்  பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது   குறிப்பிடத்தக்கது.