‘தர்பார்’ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்: சென்னை வந்த ஜப்பான் ரசிகர்கள்!

 

‘தர்பார்’ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்: சென்னை வந்த ஜப்பான் ரசிகர்கள்!

சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக நாளை  தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ttn

இந்நிலையில்  தர்பார் படத்தை காண  ஜப்பானில் இருந்து இரண்டு ரசிகர்கள் இந்தியா வந்துள்ளனர். இதுகுறித்து  நிகிலேஷ் சூர்யா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜப்பான் ரசிகர்கள் படம் பார்க்க காத்துக் கொண்டிருப்பதாகக் கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர்கள் முதல் நாள் முதல் காட்சியை சென்னை  ரோஹினி சில்வர் தியேட்டரில் பார்க்கவுள்ளதாகத் தெரிகிறது. 

முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.