தர்பார் கலெக்ஷனுக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர்!

 

தர்பார் கலெக்ஷனுக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர்!

சங்கராந்தி தெலுங்கர்களின் மிக முக்கிய பண்டிகை. உள்ளூர் ஹீரோக்கள் வரிசைகட்டி அவர்கள் படத்தை ரிலீஸ் செய்வார்கள். ராம்சரணின் வினய விதேய ராமா, பால கிருஷ்ணாவின் என்.டி.ஆர். கதாநாயகடு, வெங்கடேஷின் எஃப்2 படங்களோடு போட்டி போட முடியாமல் தெலுங்கு பாக்ஸ் ஆபிசில் பேட்டை பெரிதாக கலெக்சன் பார்க்கவில்லை.

தமிழில் எந்தளவுக்கு ஒரு மாஸ் ரஜினி படம் கலெக்சன் அள்ளுமோ, அதற்கு இணையாக இல்லாவிட்டாலும், தெலுங்கு மாஸ் ஹீரோக்களின் வசூலுக்கு குறைவில்லாமல் ஆந்திரா/தெலுங்கானாவிலும் ரஜினி படங்களுக்கு மவுசு உண்டு. ஒரே ஒரு கன்டிஷன் அப்ளை. தெலுங்கில் ரஜினி படம், மற்ற பெரிய தெலுங்கு ஹீரோக்கள் படத்தோடு மோதாமல், தனியாக வந்தால் சிங்கத்துக்கு மதிப்புண்டு. இல்லையில்லை, எப்ப வந்தாலும் ஜெயிப்போம் என 2019 பொங்கல்/சங்கராந்தி பண்டிகையின்போது தமிழ்/தெலுங்கில் வெளியான பேட்டைக்கு தமிழில் கிடைத்த வரவேற்பு தெலுங்கில் இல்லை. காரணம், சங்கராந்தி தெலுங்கர்களின் மிக முக்கிய பண்டிகை. உள்ளூர் ஹீரோக்கள் வரிசைகட்டி அவர்கள் படத்தை ரிலீஸ் செய்வார்கள். ராம்சரணின் வினய விதேய ராமா, பால கிருஷ்ணாவின் என்.டி.ஆர். கதாநாயகடு, வெங்கடேஷின் எஃப்2 படங்களோடு போட்டி போட முடியாமல் தெலுங்கு பாக்ஸ் ஆபிசில் பேட்டை பெரிதாக கலெக்சன் பார்க்கவில்லை.

Sankranthi Telugu Release

அடுத்ததாக, 2020ஆம் ஆண்டு பொங்கல்/சங்கராந்தி பண்டிகையை திரும்ப குறிவைக்கும் தர்பாருக்கும் இதே நிலை தொடரலாம். தமிழில் பொங்கல் விடுமுறை சீசன் பெரிய படங்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும். அதேநேரம், தெலுங்கிலும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன், பால கிருஷ்ணாவின் படம் என திரும்பவும் மூன்று பெரிய ஹீரோக்களின் நேர‌டிப்படம் ரிலீசாவதால், தர்பாரின் தெலுங்கு கலெக்சனில் அடிபடுவது ஏறக்குறைய உறுதி.