தர்பார் அப்டேட்: 19 வருடங்கள் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த பிரபல குணச்சித்திர நடிகர்!

 

தர்பார் அப்டேட்: 19 வருடங்கள் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த பிரபல குணச்சித்திர நடிகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் தர்பார் படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் இணைந்துள்ளார். 

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் தர்பார் படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் இணைந்துள்ளார். 

முதல் முறையாக ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தர்பார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுயடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 

இந்த நிலையில் இதில் சேது, பிரெண்ட்ஸ், போக்கிரி, காஞ்சனா படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த நடிகர் ஸ்ரீமன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ’19 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் திரையுலக வாழ்வில் முதன் முதலில் லெஜண்ட் ஒரே ஒரு சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்தில் நடிக்கிறேன். மேலும் சந்தோஷ் ஜியின் ஒளிப்பதிவில் நடிப்பதில் மகிழ்ச்சி. லைக்கா நிறுவனத்துக்கு நன்றிகள். ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்குச் சிறப்பு நன்றிகள்’ என்று கூறியுள்ளார். 

முன்னதாக  நடிகர் ஸ்ரீமன், 19 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தினா படத்தில் நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.