தர்பார் அப்டேட்: ‘இருக்கு…இன்னைக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு’ : லைகா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இதோ!

 

தர்பார் அப்டேட்: ‘இருக்கு…இன்னைக்கு  ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு’ : லைகா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இதோ!

முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

ttn

இதனால்  தர்பார்  படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக தர்பார் படத்தின் போஸ்டர்களை விமானங்களில் இடம்பெறச் செய்துள்ளனர். spicejet விமானத்தில் சென்னை டூ ஐதராபாத்  செல்லும் விமானத்தில் தர்பார் போஸ்டர்கள் தாறுமாறாக உள்ளது. 

இந்நிலையில் இந்த படத்திலிருந்து புரோமோ வீடியோவை சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் இன்று வெளியிடப்போவதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.இதனால்  ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.