தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: குற்றவாளிகள் 3 பேரை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல்

 

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: குற்றவாளிகள் 3 பேரை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூன்று பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை: தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூன்று பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2000-ஆம் ஆண்டு, டான்சி வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், தருமபுரி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், வேளாண் கல்லூரி பேருந்தை தீ வைத்து எரித்தனர். இதில், அப்பாவி கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கு விசாரணையில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

dharmapuri

இதையடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு மூவரின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் இருக்கும் இவர்கள் மூவரையும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி முன்விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது.

தமிழக அரசின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், இவர்கள் மூவரும் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளனர்.