தயாரிப்பாளர்களை ’பைத்தியம்’ என்று பதிவு போட்ட இளம் ஹீரோ…வெடித்த பஞ்சாயத்து..!?

தயாரிப்பாளர்களை ’பைத்தியம்’ என்று பதிவு போட்ட இளம் ஹீரோ…வெடித்த பஞ்சாயத்து..!?

கம்மாட்டிப்படம், கிஷ்மத்,கும்பளாங்கி நைட்ஸ்  போன்ற படங்களின் மூலம் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்தவர் நடிகர் ‘ஷேன் நிகாம்’.இரவு நேர மிதப்பில் இருக்கும் போது சமூக வலைத்தளத்தில் மலையாள புரடியூசர்களெல்லாம் ‘பைத்தியங்கள்’ என்று குறிப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

shane nigam

கூடவே,நான் எதையும் மனசுல வச்சுக்க மாட்டேன்.எனக்கு சரின்னு வெளிப்படையாக பேசிவிடுவேன்… சமீப காலமாக சிலரால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.அதனுடைய வெளிப்பாடுதான் இது… யாரையாவது காயப்படுத்தியிருந்தால்,மன்னிப்பு கேட்கிறேன்.என்றும் சொல்லியிருந்தார். நேத்து வந்த ஒரு ஹீரோ,இப்படி இஷ்டத்துக்கு பேசலாமா என்று கொதித்தெழுந்த தயாரிப்பாளர்கள் இனிமேல் எந்த புரட்யூஸரும் அவரை வைத்து படம் எடுக்கக்கூடாது என்று தடை போட்ட கையோடு தயாரிப்பதில் இருந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் உடனடியாக நிறுத்திவிட்டார்கள்.மேற்கொண்டு படம் எடுப்பதாக இல்லை,இதுவரைக்கும் படப்பிடிப்புக்கு ஆன செலவு ஏழு கோடி ரூபாயைக் உடனடியாக தயாரிப்பாளர்களுக்கு செட்டில் பண்ணனும் என்று கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்.இந்த பஞ்சாயத்து ஆரம்பித்தது கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி.
இத்தனைக்கும் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’அமைப்பில் ஷேன் உறுப்பினர் கூட இல்லை.வேறு சில தயாரிப்பாளர்கள் ஷேனின் அப்பா ‘கலாபவன் அபி’ மலையாளத்தில் முக்கியமான நடிகராக இருந்து மறைந்தவர். அவருடைய பையன் ஏதோ தெரியாமல் பேசிட்டான் என்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்திருக்கிறார்கள்.அப்படியும் சுமூகமான முடிவுக்கு வரவில்லை இந்தப் பிரச்சினை! 

ak balan

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள அமைச்சர் ஏ.கே. பாலன், “ஷேன் நிகாம் போன்ற இளம் நடிகர்கள், ஈகோவை எப்போதும் வளரவிடக்கூடாது, மறப்பதும், மன்னிப்பதும் எப்போதுமே நல்லது” என்று சொல்லியிருக்கிறார்.