தயவு செய்து ஏப்ரல் பூல் ஜோக்குகளை அனுப்பாதீங்க…… மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் வலியுறுத்தல்….

 

தயவு செய்து ஏப்ரல் பூல் ஜோக்குகளை அனுப்பாதீங்க…… மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் வலியுறுத்தல்….

ஏப்ரல் 1ம் தேதியன்று (இன்று) தயவு செய்து யாரும் ஏப்ரல் பூல் ஜோக்குகளை யாருக்கும் அனுப்பாதீர்கள் என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது போல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதியன்று முட்டாள்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் யாரும் தங்களை முட்டாள்கள் என்று சொல்வது இல்லை. மாறாக வேடிக்கைக்காக பொய்யான தகவல்களை மற்றவர்களுக்கு சொல்லி அவர்களை நம்பவைத்து முட்டாள்களாக ஆக்குவதில் ஆர்வமாக இருப்பர்.

முடக்கம்

தொற்று நோயான கொரோனா வைரஸ் மற்றும் லாக்டவுன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயவுசெய்து யாரும் யாருக்கும் ஏப்ரல் 1ம் தேதியன்று (இன்று) ஏப்ரல் பூல் ஜோக்குகளை அனுப்பாதீர்கள் என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குடிமக்களிடம் நேற்று வலியுறுத்தினார். இந்த நெருக்கடியான நேரத்தில் உண்மையான செய்திகளிலிருந்து போலி செய்திகளை முடிவு செய்வது கடினமாக உள்ளது.

மாநில அமைச்சர் அனில் தேஷ்முக்

உதாரணமாக கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு என்ற தகவல் வாட்ஸ் அப்பில் வேகமாக பார்வேர்டு ஆனது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் விஞ்ஞானிகள் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுதான். இதனால்தான் இன்று யாரும் யாருக்கும் ஏப்ரல் பூல் ஜோக்குகளை அனுப்ப வேண்டாம் என குடிமக்களிடம் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.