தயவுசெய்து இதையெல்லாம் பண்ணாதீங்க: சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வைக்கும் வேண்டுகோள் இதுதான்!?

 

தயவுசெய்து இதையெல்லாம் பண்ணாதீங்க: சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வைக்கும் வேண்டுகோள்  இதுதான்!?

தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வீடுகளில் ‘ஷவர்பாத்தில்’ குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை: தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வீடுகளில் ‘ஷவர்பாத்தில்’ குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோடைக்காலம் என்பதால் சென்னையில்  கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏரிகள், ஆறுகள் வற்றிக் காணப்படுவதாலும், இந்த வருட மழை பொய்த்துப் போய்  விட்டத்தாலும்  குடிநீர் இல்லாமல் மக்கள் திண்டாடிவருகின்றனர். ஆங்காங்கே குடிநீர் இல்லாமல் மக்கள் குடங்களுடன் தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடிச்  செல்லும் அவலநிலையும் அரங்கேறியுள்ளது.இதையடுத்து தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் 550 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சியின் காரணமாக, வரும் ஜூன் 1ம் தேதி முதல், 500 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

water

குறிப்பாகச் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலிருந்து ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.

shower

இந்நிலையில் பொதுமக்கள் சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதில் பல வீடுகளில்  ஷவர் பாதத்தில் குளிப்பதால்  40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்துக் குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. அதனால் முடிந்தவரை ஷவர் பாத்தில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

bathroom

அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட் பயன்பாட்டிற்குக் குறைந்தது 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால்  இந்தியன் டாய்லெட்டிற்கு  1 லிட்டர் தண்ணீரே பி[போதுமானது. அதனால் தண்ணீர் பற்றாக்குறை தீரும் வரை  இந்தியன் டாய்லெட் பயன்படுத்துங்கள் என்றும் சிலர் சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரைப் பயன்படுத்தி கார்களை தினசரி கழுவுகின்றனர். இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இதனால் உண்மையில் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போகலாம்., அதனால் காரை  ஈரத்துணி கொண்டு துடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

water

மேலும் வீட்டுத் தோட்டங்களில் உள்ள செடிகளுக்குக் குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீருக்கு பதிலாக  உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்தலாம் என்றும் அதேபோல் தண்ணீர் தெளித்து  கோலம் போடுவதற்கும், வீட்டை கழுவுவதற்கும்  இந்த நீரையே பயன்படுத்துதல் வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ள இந்த நடைமுறையைப் பயன்படுத்தினாலே தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு தவிர்க்கலாம்.