தயக்கம் காட்டும் மக்கள்….. கஷ்டப்பட்டு 16.46 லட்சம் வாகனங்கள் போணி.. தொடர் விற்பனை சரிவால் நெருக்கடியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

 

தயக்கம் காட்டும் மக்கள்…..  கஷ்டப்பட்டு 16.46 லட்சம் வாகனங்கள் போணி.. தொடர் விற்பனை சரிவால் நெருக்கடியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

கடந்த பிப்ரவரி மாதத்தில நம் நாட்டில் இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்டவை மொத்தம் 16.46 லட்சம் வாகனங்கள்தான் விற்பனையாகி இருந்தது. 2019 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 20.34 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

கடந்த ஆண்டு முதலே நம் நாட்டில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இடையில் ஒரு சில மாதங்கள் விற்பனை பரவாயில்லை என்ற விதத்தில் இருந்தது. புதிய ஆண்டு பிறந்த பிறகாவது வாகன விற்பனை நன்றாக இருக்கும் என வாகன நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருந்தன. ஆனால் விற்பனை தொடர்ந்து மந்தமாகவே உள்ளது.

பைக், ஸ்கூட்டர்

2019 ஜனவரி மாதத்தில் மொத்தம் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அதனை காட்டிலும் குறைவாக 16.48 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. 2019 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது விற்பனை 19.08 சதவீதம் குறைவாகும். பொருளாதார மந்தநிலையால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. இதனால் கார் போன்ற ஆடம்பர பொருட்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். 

வர்த்தக வாகனங்கள்

மேலும், வரும் 1ம் தேதி முதல் பி.எஸ்.6 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பி.எஸ்.4 வானங்கள் உற்பத்தியை குறைத்தன இது போன்ற காரணங்களால் வாகன விற்பனை சரிவடைந்துள்ளதாக இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மொத்த வாகனங்கள் விற்பனையில் பயணிகள் வாகனங்கள் மட்டும் 2.51 லட்சமாக விற்பனையானது. 1.56 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளது. பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் மொத்தம் 12.94 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 58,670 வர்த்தக வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.