தம்பி டூவீலருக்கு சீட் பெல்ட் எங்கப்பா…அபராதம் கட்டிய அப்பாவி ஆசிரியர்

 

தம்பி டூவீலருக்கு சீட் பெல்ட் எங்கப்பா…அபராதம் கட்டிய அப்பாவி ஆசிரியர்

முழுத்தொகையையும் கட்டி முடித்து விட்டு வாகனத்திற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றுள்ளார். 

சென்னை கொடுங்கையூரில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம், சீட் பெல்ட் அணியவில்லை என்று 100 ரூபாய் அபராதம் விதித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சிவா. சமீபத்தில்  மாத  தவணையில் பைக் ஒன்றை வாங்கிய அவர், முழுத்தொகையையும் கட்டி முடித்து விட்டு வாகனத்திற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றுள்ளார். 

ttn

அப்போது சிவாவிடம், நீங்கள்  கடந்த 17 ஆம் தேதி கொடுங்கையூரில் சீட் பெல்ட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுளீர்கள். இதற்கு  கொடுங்கையூர் காவல் உதவி ஆய்வாளர் பாலமணி என்பவர் இ- சலான் மூலம் அபராதம் விதித்துள்ளார். அதை செலுத்திய பிறகே உங்களுக்கு என்.ஓ.சி தர இயலும் என்று கூறியுள்ளனர். 

ttn

இதுகுறித்து கூறியுள்ள ஆசிரியர் சிவா, ’17ந்தேதி நான் ஊரில் இல்லை. ஆனாலும் இருசக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக இ- சலான் மூலம் அபராதம் செலுத்திய பிறகே  என்.ஓ.சி அளித்தார்கள் ‘ என்று விரக்தியுடன் கூறியுள்ளார். 

கணக்கிற்காக சம்பந்தமே இல்லாமல் இ-சலான் முறையில் அபராதம் விதிக்கும்  சில காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின்  கோரிக்கையாக உள்ளது.