தம்பி கல்யாணத்தில் அடித்த யோகம்: சிம்பு டைரக்டர் சொன்ன நல்ல செய்தி இதுதான்!?

 

தம்பி கல்யாணத்தில் அடித்த யோகம்: சிம்பு டைரக்டர் சொன்ன நல்ல செய்தி இதுதான்!?

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

சென்னை:  நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

வெங்கட் பிரபு – சிம்பு கூட்டணியில் `மாநாடு’ படம் உறுதியானதிலிருந்தே படத்தைக் குறித்த ஏதேனும் ஒரு செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.

simbu

சமீபத்தில் மாநாடு  படத்திற்காக தன் உடல் எடையைக் குறைக்க லண்டன் சென்றிருந்த சிம்பு, தம்பி குறளரசன் திருமணத்திற்காக ரிட்டனானார். கொழுத்த உடலுடன் சென்ற சிம்பு ஸ்லிம்மான தோற்றத்தில் வந்திருந்தது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்னும் கூட சிம்பு உடல் எடையை குறைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

str

இந்நிலையில், மாநாடு படம் குறித்த அப்டேட்டை இயக்குநர்  வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், வரும் மே  முதல் மாநாடு ஷூட்டிங் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் குறளரசன் திருமணத்தின் போது  எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 

‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் மூலம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.