தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் மோசடி! – டி.என்.பி.எஸ்.சி  கொண்டுவரும் அரதிடி திருத்தம்

 

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் மோசடி! – டி.என்.பி.எஸ்.சி  கொண்டுவரும் அரதிடி திருத்தம்

தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் கிராமப்புற, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவிகித வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரியில் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பெயருக்கு ஒரு பட்டத்தை தமிழில் படித்து பெற்றுவிட்டு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் இதனால் உண்மையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் நடைபெறும் மோசடியைத் தவிர்க்க டி.என்.பி.ஏஸ்.சி புதிய வழிமுறைகைளை கொண்டுவந்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் கிராமப்புற, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவிகித வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரியில் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பெயருக்கு ஒரு பட்டத்தை தமிழில் படித்து பெற்றுவிட்டு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் இதனால் உண்மையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில், இதை சரி செய்ய டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

tnpsc-office

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தமிழ் வழியில்தான் படிக்கின்றனர். ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது. தாங்கள் தமிழ் வழியில்தான் படித்தோம் என்பதை உறுதி செய்ய பி.எஸ்.டி.எம் என்ற சான்றிதழை விண்ணப்பதாரர் அளிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பை பள்ளி, கல்லூரிகளில் ஆங்கில வழியில் படித்தவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். இவர்கள், தொலைதூர கல்வி திட்டம் மூலம் ஏதாவது ஒரு பாடத்தில் தமிழ் வழியில் படித்து பட்டம் பெற்றுவிடுகிறார்கள். இதன் மூலம் பிஎம்டிஎம் சான்றிதழ் பெற்று தேர்வில் பங்கேற்கின்றனர். இதனால், பள்ளி, கல்லூரி என இரண்டிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே பி.எஸ்.டி.எம் சான்றிதழ் பெற திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பாணை வெளியாகும். இதன் பிறகு, பள்ளி, கல்லூரி என இரண்டிலும் தமிழ் வழியில் படித்த, கிராமப் புற மாணவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக சென்றடையும்” என்றார்.