தமிழ் ராக்கர்ஸ் எப்படி வேலை பார்க்குது? படங்களை அப்லோட் செய்வது யார்?

 

தமிழ் ராக்கர்ஸ் எப்படி வேலை பார்க்குது? படங்களை அப்லோட் செய்வது யார்?

தமிழ் திரையுலகில் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி சிறிய படங்களை இணையதளத்தில் லீக் செய்யும் பைரசி என்பது தயாரிப்பாளர்களுக்கு கடும் சவலாக இருந்து வருகிறது.

சென்னை: தமிழ் திரையுலகில் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி சிறிய படங்களை இணையதளத்தில் லீக் செய்யும் பைரசி என்பது தயாரிப்பாளர்களுக்கு கடும் சவலாக இருந்து வருகிறது.

புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சட்ட விரோதமாக தனது இணையத்தில் வெளியிட்டு வரும் ‘தமிழ் ராக்கர்ஸ்’, தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. திரைப்படங்கள் ரிலீசாகும் அன்றைய தினமே துள்ளியமான ஹெச்டி பிரிண்ட்டை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டு, யார் கையிலும் சிக்காமல் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடி வருகிறது.

திரையரங்குகளின் மூலம் தான் பைரசி அதிகரிக்கிறது என்று எண்ணிய தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், திரையரங்குகளில் தனி கண்கானிப்பு குழு அமைத்து திருட்டு வீடியோ எடுப்பதை தடுக்க முயற்சித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது கூட தெரியாமல் திரையுலகினர் திண்டாடி வருகின்றனர். ‘தமிழ் ராக்கர்ஸ்நிறுவனத்தினர் ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகம் முழுவதும் திரைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் இணையதள வசதிக்காக கூகுள், மைக்ரோசாப்ட் போன்றவைகளை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இதையும் தாண்டி டார், டார்ச் போன்ற ரகசிய இணையதளங்களும் இயங்கி வருகின்றன. ஒருவர் சாதாரணமாக கூகுளில் ஒரு வீடியோவை பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்யும்போது ஐபி முகவரியோ அல்லது செல்போனின் ஐஎம்இஐ எண்ணை வைத்து கண்டுபிடிக்க முடியும்.

ஆனால், ரகசிய இணையதளங்களை பயன்படுத்தும் போது ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற ஒரு ரகசிய இணையதளத்தை கொண்டு தான் தமிழ் ராக்கர்ஸ் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஆட்களை வைத்துள்ள தமிழ் ராக்கர்ஸ், புதிதாக ரிலீசாகும் படங்களின் ஹெச்டி பிரிண்டை வெவ்வேறு டொமைன்களின் பெயரில் பயன்படுத்தி திருட்டுத்தனமாக லீக் செய்து வருகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்காக உழைப்பவர்களுக்கு, ஊதியமும் போய் சேர்ந்துவிடுவதாக கூறப்படுகிறது. முறையாக திட்டமிட்டு செய்லபட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ், புதிதாக ரிலீசாகும் படங்களுக்கு நேரடியாக சவாலும் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதில் அதிகமான சவால்களும், அதிக பொருட்செலவும் உள்ளதாக சைபர் கிரைம் ரிபோர்ட் செய்திருப்பது தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.