தமிழ் ராக்கர்ஸ் அட்ராசிட்டி: ரிலீசுக்கு முன்னே விஜய் தேவரகொண்டா படம் லீக்!

 

தமிழ் ராக்கர்ஸ் அட்ராசிட்டி: ரிலீசுக்கு முன்னே விஜய் தேவரகொண்டா படம் லீக்!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘டாக்ஸிவாலா’ திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘டாக்ஸிவாலா’ திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’, ‘நோட்டா’ திரைப்படங்களை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘டாக்ஸிவாலா’ திரைப்படம் வரும் நவ.17ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ரிலீசாகவுள்ளது. கேப் டிரைவராக விஜய் தேவரகொண்டாவின் காரில் பேய் இருப்பது போன்ற கதையம்சத்தில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஹெச்.டி பிரிண்ட் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்காகி இருப்பது படக்குழுவினரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மனமுடைந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார். பிரபலங்கள் மட்டுமின்றி அவரது ரவுடி ரசிகர்களும் ட்விட்டரில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

முன்னதாக தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்து, சொன்னபடி திரைப்படத்தையும் ரிலீஸ் செய்தது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸில் ரிலீசாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கி வந்த போலி ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த தமிழ் ராக்கர்ஸ் தங்களது பெயரில் சிலர் போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும், அதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.