தமிழ் ராக்கர்ஸை அழிக்க அரசால் முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜு!

 

தமிழ் ராக்கர்ஸை அழிக்க அரசால் முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜு!

தமிழ் திரையுலகிற்கு பெரும் சவாலாக இருந்து வரும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தை ஒழிக்க தமிழக அரசால் மட்டும் முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ் திரையுலகிற்கு பெரும் சவாலாக இருந்து வரும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தை ஒழிக்க தமிழக அரசால் மட்டும் முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் பைரசியும், அதில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தையும் முடக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’, சூப்பர் ஸ்டாரின் ‘2.0’, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘டாக்ஸிவாலா’ உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் உடனடியாக ரிலீசானது.

tamilrockers

தமிழகத்திற்கு பைரசி ஒரு சாபமாக இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பைரசிக்கு முடிவுக்கட்ட உதவ வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இது குறித்து பேசிய ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் அழிக்க முடியாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையர்னக்கு உரிமையாளர்கள் இணைந்து வந்தால் மட்டுமே ஒழிக்க முடியும். திருட்டு விசிடியை ஒழிக்க தனிச்சட்டம் இருப்பதாகவும், அதனை நடைமுறைப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என ஆலோசனை கூறியுள்ளார்.