தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு | சினிமாவைக் காப்பாற்ற புதிய தொழில் நுட்பம்!

 

தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு | சினிமாவைக் காப்பாற்ற புதிய தொழில் நுட்பம்!

தமிழ் ராக்கர்ஸுக்கு நிரந்தரமான மூடு விழா நடத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்த விஷாலோட பதவி காலம் முழுசா முடிஞ்சு, அடுத்த தேர்தலும் நடந்து முடிஞ்சிடுச்சு. நடிகர் சங்க பதவியில் அமர்ந்ததும், விஷால் அதிரடியாய் களமிறங்கி சில பேருந்து ஓட்டுநர்களையும், பல திருட்டு விசிடி கடைக்காரர்களையும் கைது செய்ய வைத்து காலரைத் தூக்கி விட்டப்படியே தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தாவி விட்டார்.

தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு | சினிமாவைக் காப்பாற்ற புதிய தொழில் நுட்பம்!

தமிழ் ராக்கர்ஸுக்கு நிரந்தரமான மூடு விழா நடத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்த விஷாலோட பதவி காலம் முழுசா முடிஞ்சு, அடுத்த தேர்தலும் நடந்து முடிஞ்சிடுச்சு. நடிகர் சங்க பதவியில் அமர்ந்ததும், விஷால் அதிரடியாய் களமிறங்கி சில பேருந்து ஓட்டுநர்களையும், பல திருட்டு விசிடி கடைக்காரர்களையும் கைது செய்ய வைத்து காலரைத் தூக்கி விட்டப்படியே தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தாவி விட்டார்.  இரு சங்கங்களிலும் பதவியில் அமர்ந்த பிறகும், அவருடைய படங்களையே அவரால் தமிழ் ராக்கர்ஸுடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை. 

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா துறையின் ஆகப் பெரும் கவலையாகவும், தமிழ் சினிமாவின் வியாபாரத்தை அதள பாதாளத்துக்கு தள்ளி விடுகிற அரக்கனாகவும் இருந்து வந்தது ‘பைரஸி’ எனப்படும் திருட்டு சினிமா வணிகம். தமிழ் சினிமா தொழிலைப் பொருத்தமட்டில் இங்கு திருட்டு சினிமா வணிகத்தில் முன்னிலை வகிப்பது  ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் இணையதளம். சிறிய படம், பெரிய படம் என்றில்லாது எல்லா படங்களையும் சில மணி நேரத்தில் வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் வெளிடுவது, இன்னும் ஒரு படி அதிகமாக இறங்கி படம் வெளிவருவற்கு முன்பே கூட  இணையதளத்தில் பதிவேற்றுவது, ரஜினி படமே ரிலீஸானால் கூட, ரிலீஸ் தேதி எல்லாம் தனியே அறிவித்து ‘நாளை முதல்’ என்று அதகளப்படுத்தி வந்தது ‘தமிழ் ராக்கர்ஸ்’. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தற்போது, புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறது சீனா. 

இந்த தொழில்நுட்பம் அந்நாட்டில் உடனடியாக நடைமுறைக்கும் வந்து விட்டது.  இது குறித்த செயல் முறை வீடியோவை பிரபல ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சீன தொழில்நுட்ப அறிஞர்கள், இன்ப்ரா ரெட் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பதை ஒழிக்க புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், நாம் கண்களால் திரையில் படத்தைப்  பார்க்கும் போது எந்த எழுத்துக்களும் திரையில் இருக்காது. ஆனால் திருட்டுத்தனமாக காமிராவில் ஷூட் செய்து அதாவது பைரஸியாக பதிவு செய்த பின்னர் அந்த வீடியோவை பார்க்கும் போது அதில் எழுத்துக்கள்  மற்றும் வாட்டர் மார்க், பைரஸி ப்ளாக்கர் என்று திரைமுழுவதும் தோன்றும்’’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் திருட்டுத்தனமாக யாரும் படம் பார்க்க முடியாது. இனி படம் பார்க்க தியேட்டருக்கு தான் வந்தாக வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குள்ளும் அனுமதிக்கும் பட்சத்தில் தமிழ் சினிமா துறையினரின் நீண்ட நாள் கவலையும், நஷ்டமும் அகன்று பழையபடி வசந்த காலத்துக்கு திரும்பும்.