தமிழ் ரசிகர்களை சிறைபிடித்த கைதி ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது.

தமிழ் ரசிகர்களை சிறைபிடித்த கைதி ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது.

கடந்த தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான கைதி ஹிந்தி மொழியிலும் ரீமேக்  செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் கைதி ரீமேக்கை இணை தயாரிப்பு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

kaithi

லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க ஆக்ஷ்ன் தான் என்று சொல்லித்தான் படத்தை விளம்பரமே செய்தார்கள். இதனால் இப்படம் வெற்றி பெறுமா? என பலரும் சந்தேகித்தனர். ஆனால் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளிஷேக்களை உடைத்தெறிந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி அடைந்தது. 

கைதியின் ஹிந்தி ரீமேக்கை படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கிறது. 

kaithi

கைதி படத்தின்  தயாரிப்பாளர் பேசிய போது ” படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை என்ற முரண்பாடுகளுடன் வெளியான கைதியை தென்னிந்திய  ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக மாற்றியுள்ளனர். பாலிவுட் ரீமேக்கிற்காக ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த படம் நிச்சயமாக ஹிந்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தும்” என்று கூறினார்.
இந்த ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ என்று இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.