தமிழ் மாணவர்களுக்கு எதிராக பேசினேனா? – சர்ச்சை கருத்துக்கு பிரகாஷ் ராஜ் விளக்கம்

 

தமிழ் மாணவர்களுக்கு எதிராக பேசினேனா? – சர்ச்சை கருத்துக்கு பிரகாஷ் ராஜ் விளக்கம்

தமிழக மாணவர்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறியதாக எழுந்த கண்டனத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: தமிழக மாணவர்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறியதாக எழுந்த கண்டனத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பது உண்மைதான் என்றும், தான் தமிழர் இல்லை கன்னடன் என்றும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு அவரது நடிப்பை ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு சமூக வலைதளங்களில் தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் ‘நான் அப்படிப்பட்ட கருத்தைக் சொல்லவே  இல்லை. நான் பேசியதை வேண்டுமென்றே தவறாக யாரோ சித்தரித்துள்ளனர். இப்படி பட்ட செய்தவர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது என்று பதிவு  செய்துள்ளார். 

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளார் தனஞ்செயன், ‘உங்கள் தரப்பு விளக்கத்தை கூறியதற்கு மிக்க நன்றி. உங்களது எதிர்கால அரசியல் நோக்கம் குறித்த அக்கறையில் கூறுகிறேன். அரவிந்த கெஜ்ரிவால் போன்ற குருகிய மனப்பான்மையுடைய அரசியல் தலைவர்களுக்கு ஆதரவளிக்காதீர்கள். இந்தியா இந்தியர்களுக்கே. பிரிவினை வேண்டாம்’ என்று பதிவு செய்துள்ளார்.