தமிழ் மட்டும் இல்ல தெலுங்கிலும் தல அஜித் தான் வெய்ட்டு! 

 

தமிழ் மட்டும் இல்ல தெலுங்கிலும் தல அஜித் தான் வெய்ட்டு! 

தல அஜித் நடிப்பில் தமிழில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடிப்பில் தமிழில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் கூட்டணி அமைத்து, கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது விஸ்வாசம். குடும்ப படமான இதில் தல அஜித்துக்கு ஜோடியாக நயனதாரா நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியான முதல் சில நாட்களுக்கு வசூல் குறைவாக இருந்த நிலையில்,நாட்கள் செல்ல செல்ல அஜித்தின் விஸ்வாசம் 50வது நாளை கடந்து இன்றும் திரையரங்கங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில்,விஸ்வாசம் திரைப்படம் இன்று தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் மட்டும்  400 திரையரங்கங்களில் இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டும் இருக்கும் நிலையில்,தமிழில் படைத்த அதே வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. தெலுங்கிலும் இந்த ஆண்டின் தொடக்க வசூல் மன்னன் அஜித் என உறுதியாகுமா என்பதை அறிய தல ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.