“தமிழ் மக்கு” ஸ்டாலினை பங்கம் செய்த தி.மு.க போஸ்டர்

 

“தமிழ் மக்கு” ஸ்டாலினை பங்கம் செய்த தி.மு.க போஸ்டர்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா மார்ச் 1ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. ஸ்டாலின் வாக்குறுதியையும் மீறி சில இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டதால் பொது மக்கள் முகம் சுழித்தனர். தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நிலை சரியில்லை என்பதால் யாரும் நேரில் வந்து வாழ்த்துக் கூற வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி தயாரிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை சரியாக ஒட்டாததால் ஸ்டாலின் அசிங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா மார்ச் 1ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. ஸ்டாலின் வாக்குறுதியையும் மீறி சில இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டதால் பொது மக்கள் முகம் சுழித்தனர். தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நிலை சரியில்லை என்பதால் யாரும் நேரில் வந்து வாழ்த்துக் கூற வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இருப்பினும் தமிழகம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டி, அன்னதானம் வழங்கி, கேக் வெட்டி தி.மு.க-வினர் உற்சாகமாக ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க-வினர் ஒட்டிய போஸ்டர் மு.க.ஸ்டாலினை பங்கம் செய்துள்ளது. போஸ்டரை ஒட்டியவர்கள் முழுமையாக ஒட்டாமல் பாதி சுவற்றில் மடித்து ஒட்டிவிட்டனர். இதனால் தமிழ் மகனுக்கு என்பது தமிழ் மக்குக்கு என்று மாறிவிட்டது. இதை படம் பிடித்து யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட, இதை வைத்து பலரும் ஸ்டாலினை கிண்டல் செய்து பகிர்ந்து வருகின்றனர்.