தமிழ் மக்கள் மீது ராஜபக்ஷேவுக்கு கவலை இல்லை! பௌத்த மதத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு !

தமிழ் மக்கள் மீது ராஜபக்ஷேவுக்கு கவலை இல்லை! பௌத்த மதத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு !

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்ஷே சமீபத்தில் கொள்கை பிரகடன உரை  நிகழ்த்தினார். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் சந்தித்து பேசினர்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷேவின் உரையில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் எதுவும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது !
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்ஷே சமீபத்தில் கொள்கை பிரகடன உரை  நிகழ்த்தினார். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் சந்தித்து பேசினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து கருத்து வெளியிட்ட அடைக்கலநாதன், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எதுவும் பேசவில்லை என கவலை தெரிவித்தார்.

selvam-adaikalanathan

பௌத்த மதத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மட்டுமே அவரது பேச்சில் இருந்ததாக குற்றம்சாட்டிய அடைக்கலநாதன், மற்ற மதங்கள் தொடர்பாகவோ அவற்றுக்கு இருக்கும் பிரச்சினை தொடர்பாகவோ எந்த விஷயமும் பேச்சில் இடம்பெறவில்லை என தெரிவித்தார். இன ரீதியான வேறுபாடுகளை கலைந்து நாட்டை கட்டிக் காப்பாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என ஜனாதிபதி பேச்சில் தெரிவிக்கிறார். ஆனால் ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ந்து நீர்பூத்த நெருப்பாகவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் ஜனாதிபதியின் உரையில் இல்லாமல் போனது கவலைக்குரிய விஷம் என தெரிவித்துள்ளார் அடைக்கலநாதன்.