தமிழ் புலவர் ஹர்பஜனுடன் இணைவது மகிழ்ச்சி: பிரபல காமெடி நடிகர் ட்வீட்!

 

தமிழ் புலவர் ஹர்பஜனுடன் இணைவது மகிழ்ச்சி:  பிரபல காமெடி நடிகர் ட்வீட்!

திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். 

ttn

அந்த வகையில்  லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜனுடன் ஜோடி சேரவுள்ளார்.  இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கி தயாரிக்கவுள்ளனர்.   

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சதீஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்குடன் இணைவது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.