தமிழ் புத்தாண்டை ‘கணிக்கும்’ மலர் எது தெரியுமா? அதன் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

 

தமிழ் புத்தாண்டை ‘கணிக்கும்’ மலர் எது தெரியுமா? அதன் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகில் எல்லா தேசிய இனங்களுமே,தங்கள் ஆதி, வசிப்பிடமான காட்டின் நினைவாக ஒவ்வொரு மலரை தங்கள் இனத்தின் அடையாளமாகவும், கொண்டாட்ட தினங்களில் சூடவும் வரித்திருந்தார்கள்.

உலகில் எல்லா தேசிய இனங்களுமே,தங்கள் ஆதி, வசிப்பிடமான காட்டின் நினைவாக ஒவ்வொரு மலரை தங்கள் இனத்தின் அடையாளமாகவும், கொண்டாட்ட தினங்களில் சூடவும் வரித்திருந்தார்கள்.

நமது அண்டை மாநில மக்களான தெலுங்கர்களுக்கு வேப்பம் பூ பூப்பதுதான் புத்தாண்டின் துவக்கம்.மலையாளிகள் சரக்கொன்றை பூப்பதை கொண்டாடி அத்தப்பூ கோலங்கள் இட்டு புதுவருடத்தை வரவேற்கிறார்கள்.சிங்களர்கள் முள் முருங்கை பூப்பதை தங்கள் புத்தாண்டு துவக்கமாக கருதுகிறார்கள்.தொல்குடிகளான தமிழர்களோ ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு பூவை வைத்திருந்தார்கள்.

வாகை சூட வா

தமிழர்களின் மூவேந்தர்களுக்கும் தனித்தனி மரங்களை வைத்திருந்தார்கள். அவர்களது தனித்த அடையாளமாக மரங்களும்,மலர்களும் இருந்தன. சேரர்களின் அடையாளம், பனை மரம், பாண்டியர்களுக்கு வேம்பு, சோழர்களுக்கு அத்தி மரம் காவல் மரமாய் இருந்திருக்கிறது.

போரில் வென்றால் வாகைப் பூ சூடி இருக்கிறார்கள்.அதைத்தான் இப்போது, தேர்தலில் ஜெயித்தால கூட ‘வெற்றி வாகை சூடினார்’ என்கிறோம். தமிழர்களின் கடவுள் முருகன்.அவனது அடையாளம் வேங்கை மரம். ஒரு வேங்கை மரத்தான் முருகன் வள்ளி களவு மணத்துக்கு சாட்சி,அதனால்தான் முருகன் கோவில்களில் தல விருட்சமாக வேங்கை நிற்கிறது.

மதுரையை எரித்த பின் கண்ணகி கோவலன் வருகைக்காக ஒற்றை முலையுடன் காத்திருந்ததும் ஒரு வேங்கை மரத்தடியில்தான்.வேங்கை மரம் பூப்பதை வைத்துத்தான் முற்காலத்தில் தமிழ் புத்தாண்டை கணித்திருக்கிறார்கள்.இதனால் வேங்கை மரத்துக்கு கணி வேங்கை என்றொரு பெயருண்டு.சங்க இலக்கியம் முதல்,பழமொழி நாநூறு,திருப்புகழ் போன்ற எல்லாவற்றிலும் பூத்து நிற்கிறது வேங்கை.

கவிதையிலும் கட்டிடத்திலும் வேங்கை

vengai

அடர்ந்த காடு,ஒரு கரிய ஈரமான பாறையின் மேல்,வேங்கை மரத்தின் மஞ்சள் நிற மலர்கள் உதிர்ந்து இருக்கின்றன.அங்கே வரும் ஒரு யானை,புலி படுத்திருப்பதாக எண்ணி அத்துடன் போருக்குப் போவதாகச் சொல்கிறது ஒரு சங்கப்பாடல்.வேங்கை மரம் மிக உயரமாக வளரக்கூடியது.அடர்ந்த காடுகளில் பத்தடி விட்டமும் நூறடி உயரமும் உள்ள வேங்கை மரங்களைக்கூடப் பார்க்கலாம்.

வேங்கை மரம் மிக உறுதியானது என்பதால்,கதவு,நிலை,மேஜை நாற்காலி போன்ற அறைக்கலன்கள் செய்யப் பயன்படும்.பத்தாண்டுக் காலத்திலேயே முப்பது அடிக்கு மேல் வளர்ந்துவிடுவதால் இப்போது தனியார் நிலங்களில் வேங்கை வளர்க்கப்படுவது அதிகமாகி வருகிறது.

வேங்கையின் மருத்துவ குணங்கள்

vengai maram

வேங்கை மரத்தைக் கீறினால் பால் வரும்,அந்தப் பாலை தொட்டு நெற்றிப்பொட்டாக இட்டுக்கொள்ளுவார்கள்,சற்று உலர்ந்ததும் அந்த பொட்டு,கருஞ்சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும் இந்த பொட்டை இட்டுக்கொண்டால் பேய்,பிசாசுகள் அனுகாது என்பது மக்களின் நம்பிக்கை.

வேங்கை,மருது,வேம்பு,ஆவாரை,சந்தனம் ஆகிய மரங்களின் பட்டையுடன், தாமரை,செம்பருத்தி,மகிழம்பூ ஆகிய பூக்களையும், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பாசிப்பயறு,கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து பொடியாக்கி உடலுக்குத்தேய்த்துக் குளித்தால் மாசற்ற,ஒளிரும் சருமம் கிடைக்கும்.

இதன் பட்டையை அரைத்துக் குடித்தால் வயிற்றுப் போக்கு குணப்படும்.சர்க்கரை நோய் கட்டுப்படும். இதன் பட்டையுடன்,சீரகம்,சோம்பு,மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவ சொறி, சிரங்கு, படை விலகும்.

வீட்டு வாசலில் ஒரு மரம் வைத்து வளர்த்தால், வீட்டுக்கும் அழகு, உங்களுக்கு ஆரோக்கியம், அடுத்த தலைமுறைக்குப் பல லட்சங்கள் பணமும் தரும் வேங்கை.

இதையும் படிங்க: இந்த கீரையின் பூவில் இவ்வளவு பொரியல் சாப்பிட்டால் எவ்வளவு பலன்!