தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

தமிழ் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இன்று சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

rajinikanth

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் வாழ்த்து கூறுவதை வழக்கமாக செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் அனைவருக்கும் ‘என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் வெளியிட்டிருந்த அந்த பதிவு சிலமணி நேரங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களும், ஆயிரத்திற்கும் மேலான ரீடுவீட்டுகளும், குவிந்து வருகிறது. 

இதையும் படிங்க: இயக்குநராக அவதாரம் எடுக்கும் நகைச்சுவை நடிகர் விவேக்