தமிழ் புத்தாண்டு அன்று சொன்னபடி அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்!

 

தமிழ் புத்தாண்டு அன்று சொன்னபடி அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் காரணமாக  பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

லாரன்ஸ்

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் உதவி தொகையை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களுக்கு வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 லட்சமும், தினக்கூலி மற்றும் தான் பிறந்த ராயப்புரம் பகுதி ஏழை மக்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் பிரதமர் நிவாரணத்தொகைக்கு ரூ. 50லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ,50 லட்சமும் வழங்கியுள்ளார். மொத்தமாக 3 கோடி ரூபாய் வரை நிவாரணம் வழங்கினார். 3 கோடி கொடுத்தும் தன்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. நாட்டு மக்களுக்காக கூடுதல் உதவி செய்ய விருப்பப்படுகிறேன், என ஆடிட்டரிடம் பேசி தமிழ் புத்தாண்டு அன்று புது அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியிருந்தார்

இந்நிலையில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ என தமிழ் சினிமாவின் சில முக்கியமான படங்களைத் தயாரித்தவர், ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசனிடம், இன்று ரூ.25 ரூபாயை தூய்மை பணியாளர்களின் வங்கியில் செலுத்துவதற்காக ராகவா லாரன்ஸ் திரட்டியுள்ளார். இதேபோல் பல தலைவர்களிடம் நிதி திரட்டவுள்ளார் என தெரிகிறது.

இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் தங்களின் அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டையிலுள்ள நபரின் வங்கி கணக்கு எண் விவரங்களை கீழ்கண்ட வாட்ஸ் அப்ப் எண்ணுக்கு அனுப்புமாறும் இதற்காக மற்ற ஊடக மற்றும் பத்திரிக்கை துறை நண்பர்கள் உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். வாட்ஸ் அப் எண்: 6382481658