தமிழ் புத்தாண்டில் வருகிறது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’

 

தமிழ் புத்தாண்டில் வருகிறது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த படத்தில் இயக்குநர் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். சுந்தரபாண்டியனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது, மீண்டும் சசிகுமார் – பிரபாகரன் கூட்டணி சேர்ந்து கொம்புவச்ச சிங்கம்டா படத்தை எடுத்து வருகிறது.

இயக்குநர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள கொம்புவச்ச சிங்கம்டா படம் சித்திரை தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

kombu-vacha-singamda-01

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த படத்தில் இயக்குநர் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். சுந்தரபாண்டியனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது, மீண்டும் சசிகுமார் – பிரபாகரன் கூட்டணி சேர்ந்து கொம்புவச்ச சிங்கம்டா படத்தை எடுத்து வருகிறது. 
இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்ட்டியன் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. படம் எப்போது வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடாமல் இருந்தனர். இதற்குள்ளாக படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாகினர். தற்போது இந்த படம் சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் சுந்தரபாண்டியன் போல மதுரை மாவட்ட பின்னணியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.